Enable Javscript for better performance
சாலை விபத்து: முன்னாள் கூட்டுறவு சங்கச் செயலர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முன்னாள் கூட்டுறவு சங்கச் செயலர் உயிரிழந்தார்.
    கீழ்பென்னாத்தூர், பள்ள மிஷன் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை (59). ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்கச் செயலர். இவர், கடந்த 11-ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து கீழ்பென்னாத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் அருகே சென்றபோது, அந்த வழியே பாண்டு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அண்ணாமலை மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இந்த விபத்தில் பாண்டு, அண்ணாமலை ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    பின்னர், தீவிர  சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அண்ணாமலை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai