Enable Javscript for better performance
செய்யாறில் மக்கள் நீதிமன்றம்: 249 வழக்குகளுக்குத் தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் மக்கள் நீதிமன்றம்: 249 வழக்குகளுக்குத் தீர்வு

    By DIN  |   Published on : 16th July 2018 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 249 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
    செய்யாறு வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றப் பகுதியில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதியும், செய்யாறு வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான சி.ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். செய்யாறு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ஜெய்சங்கர், செய்யாறு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி டி.மோகன்குமார், செய்யாறு நீதித்துறை நடுவர் ச.சுந்தர்பாண்டியன் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் வி.பி.கே.விவேகானந்தன், பார் அசோசியேஷன் தலைவர் ஜி.அசோக், மூத்த வழக்குரைஞர்கள் ஆகியோர் மேற்பார்வையில் மக்கள் மன்றம் நடைபெற்றது.
    மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 249 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ. ஒரு கோடியே 89 லட்சத்து 54 ஆயிரத்து 288-ஐ திருப்பிச் செலுத்த எதிர் மனுதாரர்கள் ஒப்புக்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai