Enable Javscript for better performance
பள்ளிக் கல்விசாரா பணியாளர்கள் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்விசாரா பணியாளர்கள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏழுமலை, மாவட்ட மகளிரணித் தலைவர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில், பள்ளிசாரா கல்விப் பணியாளர்களை கிராம ஊராட்சியில் உள்ள நூலக பணியாளராக நியமனம் செய்ய அரசு உத்தரவிடவேண்டும். மேலும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அலுவலகங்களில் பணியாளராக நியமனம் செய்ய வேண்டும். தற்போதுள்ள மதிப்பூதியத்தை தொகுப்பூதியமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இதில், மாவட்டத் தலைவர் குமார், மாவட்டச் செயலர் நடேசன், மாவட்டப் பொருளாளர் சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைத் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai