Enable Javscript for better performance
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற சாலைப் பணியாளர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஏழுமலை தலைமை வகித்தார்.
    மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.அருள்மொழி, கே.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை வட்டக் கிளைத் தலைவர் ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றார். சங்கத்தின் மாநிலச் செயலர் கே.தமிழ்ச்செல்வன் மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசினார்.
    சங்கத்தின் மாநிலத் தலைவர் ம.சண்முகராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஒப்பந்தமுறை ஊழியர் நியமனத்துக்கு வழிவகுக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். பணியாளர் சீரமைப்புக் குழுவை கலைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
    அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலர் கா.பெருமாள், மாநில துணைத் தலைவர் ப.சண்முகசுந்தரம், மாநிலச் செயலர் ஆர்.சண்முகம், கோட்டத் தலைவர்கள் ஆர்.ஆல்அரசன், எல்.சிவசங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai