Enable Javscript for better performance
யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பக்தி இன்னிசைக் கச்சேரி- Dinamani

சுடச்சுட

    

    யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பக்தி இன்னிசைக் கச்சேரி

    By DIN  |   Published on : 16th July 2018 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பக்தி இன்னிசைக் கச்சேரியும், பகவானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கம் நாடகமும் நடைபெற்றது.
    திருவண்ணாமலை - செங்கம் சாலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் உள்ளது. இங்கு, பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா 2017 நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி 2018 டிசம்பர் மாதம் வரை நடைபெறுகிறது.
    இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீயோகிராம் சுரத்குமார் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    மாலை 4 மணி முதல் 6 மணி வரை பகவானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நாடகம் நடைபெற்றது. ஸ்ரீமதி ஆஸ்வர்யா குமாரவேல் இயக்கிய இந்த நாடகத்தில் சிவகாசி பஜனாஸ்ரமம் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடித்திருந்தனர்.
    தொடர்ந்து, மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    விழா ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் மா தேவகி, ஆர்.விஜயலட்சுமி, ஜி.ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், டி.எஸ்.ராமநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன், தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் மற்றும் தன்னார்வலர்கள், ஆஸ்ரம ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai