Enable Javscript for better performance
ரேஷன் கடை ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் கடை ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 16th July 2018 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஆனந்தன் தலைமை வகித்தார்.
    மாவட்ட துணைத் தலைவர் ஏ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வி.வேல்முருகன் வரவேற்றார்.
    சங்கத்தின் மாநிலப் பொருளாளரும், மாவட்டச் செயலருமான ஏ.சேகர் ஆண்டறிக்கை வாசித்தார். சங்கத்தின் மாநில கெளரவ பொதுச் செயலர் சி.குப்புசாமி, மாநில பொதுச் செயலர் கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
    கூட்டத்தில், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும். குடும்ப அட்டைகளுக்கு 100 சதவீதம் பொருள்களை வழங்க வேண்டும். 10 ஆண்டு நிலுவையில் உள்ள ஓய்வூதியம், கருணைத் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இதில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் ஆர்.துரைக்கண்ணு, ஜி.சங்கரன், மாநில இணைச் செயலர்கள் பி.காமராஜ், எஸ்.ஜி.செந்தில்குமார், முன்னாள் மாநிலத் தலைவர் பி.செல்லமுத்து, முன்னாள் மாநில இணைச் செயலர்கள் வி.கண்ணன், எம்.மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai