Enable Javscript for better performance
வந்தவாசியில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

    By DIN  |   Published on : 16th July 2018 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி நகர காங்கிரஸ் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு காங்கிரஸ் நகரத் தலைவர் யூனிஸ்கான் தலைமை வகித்தார். தொகுதித் தலைவர் (தகவல் தொழில்நுட்பப் பிரிவு) வந்தை பிரேம், எஸ்.சி, எஸ்.டி பிரிவு நகரத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரிப் பிரிவு மாவட்டத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார்.
    காமராஜர் சிலைக்கு மாவட்டப் பொருளாளர் பிரசாத் மாலை அணிவித்தார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல்கலீம், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலர் வினோத் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினர். விழாவில் சவுக்கத்பாஷா, ஷேக்இலியாஸ், பரணிகுமார், பரந்தாமன், கோவர்த்தனன், உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai