Enable Javscript for better performance
2 டிராக்டர்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே மணல் கடத்திய 2 டிராக்டர்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
    தண்டராம்பட்டு வட்டத்திலுள்ள தேவரெட்டியார்குப்பம், மலைமஞ்சனூர் கிராமங்களில் வட்டாட்சியர் சுப்பிரமணியன் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேவரெட்டியார்குப்பம் பாம்பாறு வழியாக மணல் கடத்தி வந்த ஒரு டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    தொடர்ந்து, மலைமஞ்சனூர் தென்பெண்ணையாற்றில் ரோந்து சென்றபோது அந்த வழியே மணல் கடத்தி வந்த மற்றொரு டிராக்டரையும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 டிராக்டர்களும் தானிப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai