Enable Javscript for better performance
அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டடங்கள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 28.10 கோடியில் கட்டப்பட்ட 200 படுக்கைகளுடன் கூடிய 4 மாடி கட்டடம், 100 மாணவ-மாணவிகளுக்கான தங்கும் விடுதியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிக்கு ரூ. 28.10 கோடியில் 200 படுக்கைகளுடன் கூடிய 4 மாடிக் கட்டடம், மாணவர்களுக்கான தேர்வுக் கூடம், 100 மருத்துவ மாணவ - மாணவிகள் தங்குவதற்கான விடுதிக் கட்டடம், பணியாளர் குடியிருப்பு, வங்கி மற்றும் அஞ்சலக நிலையக் கட்டடம் ஆகியவை அண்மையில் கட்டி முடிக்கப்பட்டன.
    இந்தக் கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
    இதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா, மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷகில் அஹமத், துணைக் கண்காணிப்பாளர் குப்புராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai