Enable Javscript for better performance
காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை, போளூர், ஆரணி  பகுதிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 
    திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கம், மாவட்ட எக்ஸ்னோரா ஆகியவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
    விழாவுக்கு மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி முன்னிலை வகித்தார். தமிழ்ச் சங்கச் செயலர் ந.சண்முகம் வரவேற்றார்.
    திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வஅரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    நிகழ்ச்சியில் மாவட்ட எக்ஸ்னோரா நிர்வாகிகள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, லதா பிரபுலிங்கம், பொறியாளர் ச.சிவசங்கரன், ச.சுப்பிரமணியன், ச.பாலு, மாவட்டத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பொன்.அன்பழகன், தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன், பிருந்தா அருண்குமார், தலைமை ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன், ஆசிரியர் பலராமன், மாவட்ட எக்ஸ்னோரா செயலர் ஆர்.வெங்கடேசபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    பெரியகரம் ஊராட்சியில்... அதேபோல, போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
    விழாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்சிக் கொடியேற்றி, காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பழனி, மாவட்டத் துணைத் தலைவர் அருணகிரி, வட்டாரத் தலைவர் ஏழுமலை, மாநில ஆலோசகர் தேவராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    அரசுப் பள்ளியில்... போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கல்வி வளர்ச்சி நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
    விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை பா.தாமரைச்செல்வி தலைமை வகித்தார். மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, கவிதை, பாட்டு, நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
    பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சின்னதம்பி காமராஜர் போல வேடமணிந்து, கல்வியின் முக்கியத்தும், நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசினார். தொடர்ந்து, பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    நிகழ்ச்சியில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ராமானுஜம், இசை ஆசிரியர் பாண்டியன், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
    சேத்துப்பட்டில்... ஆரணியை அடுத்த சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
    பள்ளித் தாளாளர் பா.செல்வராசன் தலைமை வகித்தார். செயலர் செந்தல்குமார், துணைத் தலைவர் பிரவின்குமார், ஓருங்கிணைப்பாளர் பிரதாபன், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன், கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் மேஜர் நசிர்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் முரளிதரன் வரவேற்றார். 
    விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் நரசிம்மன் கலந்து கொண்டு காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழச்சிகள் நடைபெற்றன. பள்ளி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.
    முன்னதாக, சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாணவர்களுடன் பேரணியாகச் சென்று பள்ளித் தாளாளர் பா.செல்வராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai