Enable Javscript for better performance
கிரிவலப் பாதையில் கடைகள் அமைப்பது குறித்து ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல்வேறு அரசுத் துறைகளின் விற்பனைக் கடைகளை அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பௌர்ணமி கிரிவல நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
    எனவே, கிரிவலம் செல்லும் பக்தர்களின் நலன் கருதி அந்தப் பாதையில் அரசுத் துறைகள் மூலம் விற்பனைக் கடைகள், பூங்கா, ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    இதற்காக சுற்றுலா வாகனத்தில் புறப்பட்ட அதிகாரிகள் குழுவினர், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முதல் அண்ணா நுழைவு வாயில் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் ஓய்வு அறை, கழிப்பறைகள், தோட்டக்கலைத் துறை மூலம் தோட்டக்கலைப் பூங்கா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் நரிக்குறவர்களுக்கு தனி விற்பனை வளாகம், ஆவின் பாலகம், காதிப் பொருள்கள் விற்பனைக் கடை, சித்த மருத்துவப் பொருள்கள் கடை ஆகியவற்றை அமைப்பதற்கான இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    குறிப்பாக, அண்ணா நுழைவு வாயில், காஞ்சி சாலை அரசுப் போக்குவரத்து பணிமனை எதிரே இடுக்குப் பிள்ளையார் கோயில், குபேர லிங்கம், இலங்கைத் தமிழர் முகாம், அபய மண்டபம், கோசாலை வாயு லிங்கம், அடி அண்ணாமலை, வேடியப்பனூர், வீர ஆஞ்சநேயர் கோயில், ஆணாய்பிறந்தான் கிராமம் -செங்கம் சாலை சந்திப்பு, நகராட்சி சந்தை மேடு, அரசுக் கல்லூரி ஆகிய பகுதிகளில் கடைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுலவர் பொ.ரத்தினசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியர் தங்கவேலு, வட்டாட்சியர் மனோகரன் மற்றும் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஆவின், தோட்டக்கலைத் துறை, பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலத் துறைகளின் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai