Enable Javscript for better performance
சாகுபடி பரப்பை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சாகுபடி பரப்பைப் பதிவு செய்ய அனக்காவூர் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    அனக்காவூர் வட்டாரத்தில் நெல், மணிலா, கரும்பு, உளுந்து ஆகிய பயிர் வகைகளைச் சாகுபடி செய்துள்ள  விவசாயிகள், சாகுபடி செய்த பயிர்களின் விவரம், பரப்பளவு குறித்த விவரங்களை உடனடியாக தங்களது பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், உரிய அடங்கல் விவரங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும். 
    இவ்வாறு செய்வதால் பயிர்க் காப்பீடு, நுண்ணீர்ப் பாசனத் திட்டம் உள்ளிட்ட வேளாண் திட்டங்களின் பயன்களுக்கும், இயற்கை இடர்பாடுகளான மழை, வெள்ளம், வறட்சி ஏற்படும் காலங்களில் மிக எளிதாக பாதிக்கப்பட்ட பயிர்களின் பரப்பளவுக்கு ஏற்ப விவசாயிகள் நிவாரணம் பெறவும் ஏதுவாக இருக்கும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai