Enable Javscript for better performance
டெங்கு குறித்து விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி வட்டாரப் பொது சுகாதாரத் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் பாதூர் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
    முகாமுக்கு வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி தலைமை வகித்தார். இதையொட்டி, பாதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் கிராம வீதிகள் வழியாகச் சென்றது. மேலும், டெங்கு என்ற எழுத்து வடிவில் மாணவ, மாணவியர் அமர்ந்து பொதுமக்களுக்கு டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.வெங்கடேசபாபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai