Enable Javscript for better performance
தமிழ்நாடு பொன்விழா ஆண்டு  விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பொன்விழா ஆண்டு  விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

    By DIN  |   Published on : 17th July 2018 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (ஜூலை 19) நடைபெறும் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் 21 வயதுக்கு உள்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    "தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டு, தமிழகம் 50-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதையொட்டி, பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது.
    இதையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 21 வயதுக்கு உள்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
    இந்தப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் 21 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். (1.1.1997 அன்றோ, அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும்). மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ. 2500-ம்,  2-ஆம் பரிசாக ரூ. 1,500-ம், 3-ஆம் பரிசாக ரூ. 1,000-மும் வழங்கப்படும்.
    மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்து வருவதற்கான, புகைப்படத்துடன் கூடிய (குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பள்ளி மதிப்பெண் சான்று உள்ளிட்டவற்றின் நகல்) சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
    விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சொந்த மாவட்டம், பணிபுரியும் மாவட்டம், பள்ளி - கல்லூரியில் படிக்கும் மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். 
    பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்படுவதால் வீரர்கள் தங்களது வங்கிக் கணக்குப் புத்தக நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
    போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லூரியில் இருந்து ஆளறிச் சான்றைத் தவறாமல் கொண்டு வர வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலானப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
    மாநிலப் போட்டிகளில் முதலிடம் பிடிப்போருக்கு ரூ. 50 ஆயிரம், 4 கிராம் தங்கப் பதக்கமும்,  2-ஆம் பரிசாக ரூ. 25 ஆயிரம், 4 கிராம் தங்கப் பதக்கமும், 3-ஆம் பரிசாக ரூ. 10 ஆயிரம், 4 கிராம் தங்கப் பதக்கமும் வழங்கப்படும். 
    மேலும் விவரங்களுக்கு 04175 - 233169 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் என 
    அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai