Enable Javscript for better performance
திறக்கப்படாத கிராமப்புற நூலகங்கள்!- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நூலகங்கள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த நூலகங்களை நாள்தோறும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 34 கிராம ஊராட்சிகளில் நூலகங்கள் உள்ளன. அந்த நூலகங்களை கண்காணிக்க தினக்கூலி பணியாளர்களாக அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்ற நபர்களை நியமனம் செய்து நூலகங்கள் காலை, மாலை திறக்கப்பட்டு வந்தன.
    இந்த நூலகங்களுக்கு செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் புத்தகங்கள் மற்றும் நாளேடுகள் வரவைக்கப்பட்டு சிறப்பான முறையில் இயங்கி வந்தன.
    இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும்பாலான கிராமங்களில் உள்ள நூலகங்கள் திறக்கப்படுவதில்லை. அப்படியே திறக்கப்பட்டாலும் புத்தகங்கள், செய்தித் தாள்கள் ஏது வருவதில்லை. சில கிராமங்களில் உள்ள நூலகக் கட்டடங்களில் சமூக விரோதச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. சில நூலகக் கட்டடங்கள் மாட்டுத் தொழுவமாக மாறிவிட்டன. மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்கவும், பொதுமக்களின் நேரத்தைப் பயனுள்ளதாக்கவும் தொடங்கப்பட்ட கிராமப்புற நூலகங்கள் பராமரிப்பின்றியும், மூடப்பட்டும் வருகின்றன.
    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமப்புற நூலகங்களைச் சிறப்பான முறையில் பராமரித்து, நாள்தோறும் திறக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai