Enable Javscript for better performance
நட்சத்திர விருட்சக நாயகர் கோயிலில்  மகம் நட்சத்திர பித்ரு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    நட்சத்திர விருட்சக நாயகர் கோயிலில்  மகம் நட்சத்திர பித்ரு பூஜை

    By DIN  |   Published on : 17th July 2018 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறை அடுத்த கூழமந்தலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்சக நாயகர் கோயிலில் மகம் நட்சத்திர பித்ரு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.   
    காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் கிராம ஏரிக்கரையில் 27 நட்சத்திர அதிதேவதைகளின் விருட்சக நாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திங்கள்கிழமை காலை மகம் நட்சத்திர அதிதேவதையும், மூதாதையர்களின் தெய்வமுமான பித்ரு பகவானுக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, பின்னர் பலவிதமான வாசனை திரவியப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    முன்னதாக, நட்சத்திர விருட்சக நாயகருக்கும், ராகு, கேது பகவான்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பித்ரு பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று தங்களது முன்னோரை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai