Enable Javscript for better performance
பள்ளியில் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டை அடுத்த கெங்கைசூடாமணி ஊராட்சியில் உள்ள சாந்தா மெட்ரிக். பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மைப் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
    அடி அண்ணாமலையார் இண்டேன் எரிவாயு ஏஜென்சி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி, பள்ளி  வளாகம் என அந்த கிராமச் சுற்றுப்புறப் பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டன.
    மேலும், மாணவர்களுக்கு எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டன. இதையடுத்து, பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்திய வரைபடம் போல அமர்ந்து, தூய்மைப் பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    நிகழ்ச்சியில் அடி அண்ணாமலையார் இண்டேன் எரிவாயு ஏஜென்சி உரிமையாளர் ரமணிபாய் சத்தியன், மேலாளர் சத்தியன், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai