Enable Javscript for better performance
பெண் காவலர் தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை, ஆயுதப்படை காவலராகப் பணிபுரிபவர் ஓவியா (22). இவரது கணவர் குமரேசன், விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். ஓவியா, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வாடகை வீட்டில் உறவினர்களுடன் வசித்து வருகிறார்.
    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஓவியா கத்தியால் கையைக் கிழித்துக் கொண்டு ரத்தம் வழிந்த நிலையில் மயங்கிக் கிடந்தார். 
    வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீடு திரும்பியதும் ஓவியாவை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
    தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலைய போலீஸார் ஓவியாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அண்மையில் திருவண்ணாமலை ஆயுதப்படைக்கு மாறுதலாகி வந்த ஓவியாவுக்கு குடும்பத் தகராறு இருந்ததாம். விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓவியா, கணவர் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டத்திலேயே பணிபுரிய விரும்பினாராம். இதற்கான வாய்ப்புக் கிடைக்காததால் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து, போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai