Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டம்: 575 மனுக்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 575 மனுக்கள் வரப் பெற்றன.
    கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 575 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
    இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
    கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஒருவருக்கு ரூ. 3,400 மதிப்பிலான ஊன்றுகோல், விவசாயப் பணியில் ஈடுபட்ட போது, டிராக்டரில் சிக்கி உயிரிழந்த வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் குடும்பத்துக்கு விபத்து நிவாரணத் தொகை ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் க.லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சரவணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai