ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான முன்மாதிரி ஆயத்த தேர்வு முகாம்
By DIN | Published on : 17th July 2018 09:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலையில் ராஜ்ய புரஸ்கார் விருது பெறும் சாரண - சாரணியர்களுக்கான முன்மாதிரித் தேர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாத் குளோபல் பப்ளிக் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். சாரண - சாரணியர் அமைப்பின் மாவட்டச் செயலர் பியூலா கரோலின், சாரணியர் இயக்கத்தின் ஆணையர் ஜோதிலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சாரண - சாரணிய அமைப்பின் வடக்கு மண்டல அலுவலர் சீனுவாச வரதன் முகாமை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 40 பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சாரண - சாரணியர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் சோதனை தேர்வுகள் நடைபெற்றன. திறமை, சின்னத்துக்கான மாதிரிப் பயிற்சிகள், தொகுப்புப் பதிவேடுகள் தயாரித்தல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாதிரிப் பயிற்சிகளை சூடாமணி, செந்தில், ரமேஷ், கால்நடை ஆராய்ச்சி மையத் தலைவர் தியோபிலஸ் ஆனந்தகுமார், பாலகுமார், கலைவாணி ஆகியோர் அளித்தனர்.
மாவட்டம் முழுவதும் சாரணியர் இயக்கம் இயங்கும் பள்ளிகளுக்கு வாரண்ட், சாட்டர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.