Enable Javscript for better performance
விளையாட்டு விடுதிகளில் சேர  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    விளையாட்டு விடுதிகளில் சேர  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 17th July 2018 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு மேம்பாட்டு விடுதிகளில் சேர திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களுக்கான விடுதிகள் சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், மாணவிகளுக்கான விடுதிகள் சென்னை, ஈரோடு ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
    இந்த விடுதிகளில் காலியாக உள்ள விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக விளங்க 6, 7, 8-ஆம் வகுப்புகளில் மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்கான 
    2-ஆம்கட்ட மாநில அளவிலான தேர்வு வரும் புதன்கிழமை (ஜூலை 18) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
    தேக்வாண்டா (ஆண்கள்), ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆண்கள் மற்றும் பெண்கள்), மேசைப்பந்து (பெண்கள்), நீச்சல் (ஆண்கள்), தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), இறகுபந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), டென்னிஸ் (ஆண்கள்) ஆகிய விளையாட்டுகளுக்கான போட்டிகள் சென்னை, பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றன.
    விளையாட்டில் சிறந்து விளங்கும், ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் 2018 - 2019ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.மேலும், ‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18-ஆம் தேதியன்று காலை 8 மணிக்குள் நேரில் மாநிலத் தேர்வு மையத்தில் 
    சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai