Enable Javscript for better performance
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து மோசடி: அரிசி ஆலை அதிபர் மீது விவசாயிகள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து மோசடி: அரிசி ஆலை அதிபர் மீது விவசாயிகள் புகார்

    By DIN  |   Published on : 17th July 2018 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரணமல்லூரில் விவசாயிகளிடம் ரூ. ஒரு கோடி வரை நெல் கொள்முதல் செய்து, பணம் தராமல் மோசடியில் ஈடுபட்டதாக அரிசி ஆலை அதிபர் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை விவசாயிகள் புகார் அளித்தனர்.
    திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
    பெரணமல்லூரைச் சேர்ந்தவர்  
    எஸ்.பழனி, எஸ்.வி.எஸ். என்ற பெயரில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர், விவசாயிகளை அணுகி ஒரு மூட்டை நெல் 
    ரூ. ஆயிரம் என விலை பேசி வாங்கினார். ஆனால், பேசியபடி விவசாயிகளுக்குப் பணம் தரவில்லையாம். அவர் கொடுத்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டன. இந்த வகையில் அவர், சுமார் ரூ. ஒரு கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளார். பணத்தைக் கேட்கும் விவசாயிகளிடம் பணம் தர முடியாது என்று மிரட்டுகிறார். எனவே, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர். 
    இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai