Enable Javscript for better performance
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச் சங்கஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள  திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச் சங்க மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் அன்பழகன், தசரதன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் ஜெயசீலன் வரவேற்றார். கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன், அமைப்புசாரா தொழிலாளர்கள் கிராமங்கள் தோறும் சேர்க்க விண்ணப்ப படிவத்தை வழங்கினார். இதில், வந்தவாசி, பெரணமல்லூர், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai