Enable Javscript for better performance
ஆடி மாதப் பிறப்பு: அம்மன் கோயில்களில் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆடி மாதப் பிறப்பு: அம்மன் கோயில்களில் திருவிழா தொடக்கம்

    By DIN  |   Published on : 18th July 2018 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆடி மாதப் பிறப்பையொட்டி, செங்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் ஆடித் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
    செங்கம் அருகே அமைந்துள்ள புதூர் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்து விழாவைத் தொடக்கிவைத்த்தார்.
    தொடர்ந்து, பல்வேறு கிராமத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள், பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வசதிக்காக செங்கத்தில் இருந்து புதூர் மாரியம்மன் கோயிலுக்கு அரசு நகர்ப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
    கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டுமலையனூர், கெங்கனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் 308 பால்குட அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, காலை 9 மணிக்கு கிராம மக்கள் அங்குள்ள ஸ்ரீவிநாயகர் கோயிலில் பால்குடங்களுடன் திரண்டனர். தொடர்ந்து, காலை 11 மணிக்கு பம்பை, உடுக்கை, மேளதாளங்கள் முழங்க 308 பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
    காளியம்மன் கோயிலில் ஊர்வலம் முடிவடைந்தது. 
    இதையடுத்து, அம்மனுக்கு 308 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. 
    பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெண்கள் பலர் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    செங்கம் அடுத்த புதூர் மாரியம்மன் கோவிலில் ஆடி,ஆவணி மாத திருவிழாவில் செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தேர் இழுத்து தொடங்கிவைத்தார். உடன் அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai