Enable Javscript for better performance
ஆதித்தமிழர் பேரவையின் செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். ஒன்றிய நிதிச் செயலர் எஸ்.முனியன், விழுப்புரம் மாவட்டச் செயலர் சிவபால சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணிச் செயலர் வி.விக்னேஷ் வரவேற்றார்.
    திருவண்ணாமலை மாவட்டச் செயலர் துரை சேகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அருந்ததியர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆதித்தமிழர் பேரவை, கிளைகளைத் தொடங்கி பெயர் பலகையைத் திறக்க வேண்டும்.
    ஜூலை 30-ஆம் தேதி சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடைபெறும் தொடர் முழக்கப் போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்து கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், துணைச் செயலர் அதியவளவன், பேரவை உறுப்பினர் லியோன் உள்பட பலர் கலந்து 
    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai