Enable Javscript for better performance
உலக சான்றோர் சங்கம் சார்பில் கல்வித் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையை அடுத்த பசுங்கரை கிராமத்தில் உலக சான்றோர் சங்கம் சார்பில், கல்வித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு உலக சான்றோர் சங்கத்தின் நிறுவனர் தலைவர் மாம்பலம் ஆ.சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன், மாலா சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் ந.சண்முகம் வரவேற்றார்.
    பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாம்பலம் ஆ.சந்திரசேகர் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து, திரைப்படங்கள் சமுதாயத்தை சீர்படுத்துகிறதா, சீரழிக்கிறதா என்ற தலைப்பில் பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. எஸ்.எஸ்.இஸ்மாயில் நடுவர் பொறுப்பேற்றார். கவிஞர்கள் லதா பிரபுலிங்கம், தேவிகா ராணி, உமாதேவி பலராமன், அ.பாக்கியலட்சுமி ஆகியோர் பேசினர். விழாவில், புலவர் ஆறுமுகம், இரா.முத்துமாணிக்கம், கு.காமராஜ், பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai