Enable Javscript for better performance
எளிதில் புரியும் வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்த- Dinamani

சுடச்சுட

    

    எளிதில் புரியும் வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 18th July 2018 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்திட வேண்டும் என்று ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
    செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் 9, 11-ஆம் வகுப்பு புதிய பாடத் திட்டம் குறித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:
    ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்திட வேண்டும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான இடைவெளி குறைய வேண்டும். 
    நல்ல தேர்ச்சியை கொடுத்தால் தான் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் 350 ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக கணக்கிடப்பட்டு, திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.
    மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் யார் குறுக்கிட்டாலும் மாவட்டக் கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். அதே போன்று, பள்ளியில் மாணவர்களின் நலன் பாதிக்கும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும்.
    அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் இடையே பாகுபாடு இருக்கிறது. அனைவருமே ஆசிரியர்கள் தான். பள்ளியில் ஆசிரியர்களிடையே பாகுபாடு இருக்கக் கூடாது என்றார்.
    நிகழ்ச்சியில் இந்தோ அமெரிக்கன் பள்ளி முதல்வர் சையத் இலியாஷ், பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    செய்யாறு வட்டார வள 
    மையத்தில்...: இதேபோல, செய்யாறு வட்டார வள மையத்தில் முதல் வகுப்பு புதிய பாட நூல் குறித்து ஆசிரியர்களுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் க.சீனுவாசன் தொடக்கி வைத்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.புவனேஸ்வரி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி குறித்த கருத்துக்களை தெரிவித்தனர்.
    பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் ப.பேபி, தி.வைரப்பிரியா, கு.மேனகாதேவி மற்றும் எம்.சத்தியராஜ், உதவி ஆசிரியர் பில்லாந்தி, கருணாகரன் உதவி ஆசிரியர் தேவனாத்தூர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
    இந்தப் பயிற்சியில் 90 தொடக்கக் கல்வி தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai