Enable Javscript for better performance
எஸ்.பி. அலுவலகத்தில் திருக்குறள் திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திறக்குறள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எண்ணெய் வண்ணத்தில் திருக்குறள்கள் எழுதப்பட்டன. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு புலவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
    திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிர்வாகி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன், புலவர்கள் சீனுவாச வரதன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு இதனை இதனால் என்று தொடங்கும் திருக்குறளை திறந்து வைத்துப் பேசினார்.
    விழாவில், திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள் அம்பீ, பக்தவச்சலம், சுப்பிரமணி, சேது, சிவலிங்கம், பலராமன், விஸ்வநாதன், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai