Enable Javscript for better performance
டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வேட்டவலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்து அலுவலர் பவித்ரா, இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராமலிங்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெள்ளையன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஹத்திம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    வேட்டவலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். இவர்கள், டெங்கு காய்ச்சல் பரவும் முறைகள், காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள், காய்ச்சல் வந்தால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். மாணவிகள் தங்களது கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகரன், தசரதன், மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலமுருகன், உதவித் தலைமை ஆசிரியர் முருகையன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai