Enable Javscript for better performance
தீ விபத்தில் குடிசை வீடு சேதம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது.
    வந்தவாசியை அடுத்த பென்னாட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மனைவி செல்வி. இவர்கள் இருவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். சாமிக்கண்ணு திங்கள்கிழமை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், செல்வி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
    அப்போது, குடிசை வீட்டின் மேல் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதால் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. 
    தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
    இந்த தீ விபத்தில் சாமிக்கண்ணு வீட்டிலிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வி அளித்த புகாரின்பேரில், தெள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai