Enable Javscript for better performance
நெகிழி தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    போளூர் பேரூராட்சி சார்பில், டேனிஷ்மிஷன் தொடக்கப் பள்ளியில் நெகிழியை (பிளாஸ்டிக்) பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
    இந்த முகாமில் துப்புரவு ஆய்வாளர் சோமு பேசியதாவது: மாணவர்கள் மக்கும், மக்காத  குப்பையை தரம் பிரித்து பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போட வேண்டும். நெகிழிப் பைகளை உபயோகிப்பதைத் தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். நெகிழிப் பைகள் மண்ணில் மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும். நெகிழியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது என்றார். இதில், செயல் அலுவலர் ஜெசிமாபானு, தலைமை எழுத்தர் எழிலரசி மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai