Enable Javscript for better performance
பள்ளியில் பாரம்பரிய மரபுவழிதின்பண்டங்கள் அங்காடி திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியில் பாரம்பரிய மரபுவழி தின்பண்டங்கள் அங்காடி திறப்பு

    By DIN  |   Published on : 18th July 2018 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய மரபுவழி தின்பண்டங்கள் விநியோக அங்காடித் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    மகளிர் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு மூலம் தொடங்கப்பட்ட அங்காடி திறப்பு விழாவுக்கு பயிற்சி ஆட்சியர் மு.பிரகாஷ் தலைமை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அங்காடியைத் திறந்து வைத்துப் பேசுகையில், இந்த அங்காடியில் ரூ.1 முதல் ரூ.15 வரையிலான விலை கொண்ட கடலை மிட்டாய், எள் உருண்டை, வேர்க்கடலை, கேழ்வரகு அடை, சுக்கு காபி, புட்டு, நவதானிய அவியல், அதிரசம், முறுக்கு என பல்வேறு பொருள்கள் விற்கப்படும் என்றார்.
    விழாவில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai