Enable Javscript for better performance
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த முன்னூர்மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
    முன்னூர்மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காமராஜர் குறித்த கட்டுரை, பேச்சுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் வெள்ளைச்சிசுந்தரம் தலைமை வகித்தார். பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் குணசேகரன், ஆசிரியர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் பழநி வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்வின்சென்ட் கலந்து கொண்டு, மாணவர்களிடையே காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் சிராஜ், பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
    நிகழ்ச்சியில் கிராம கல்விக்குழுத் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai