Enable Javscript for better performance
போளூர் அண்ணா பூங்காவில் காவல் ஆய்வாளர் திடீர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    போளூர் அண்ணா பூங்காவில் காவல் ஆய்வாளர் நா.சுரேஷ்பாபு செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களைப் பிடித்து எச்சரித்து அனுப்பினார்.
    போளூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்குச் சொந்தமான 
    அண்ணா பூங்கா  திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ளது. இந்தப் பூங்கா காலைலையில் 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், மாலையில் 3.30 முதல் 6 மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும். இந்தப் பூங்காவை பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும், பொழுதுபோக்குக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பூங்காவில் சிலர் மது அருந்துதல், வீணாக 
    கூச்சல் இடுவது என பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்தனர். இதுகுறித்து போளூர் காவல் ஆய்வாளர் நா.சுரேஷ்பாபுவிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.  அதன்பேரில், 
    காவல் ஆய்வாளர் நா.சுரேஷ்பாபு, காவல் உதவி ஆய்வாளர் கா.தயாளன் மற்றும் போலீஸார் திடீரென பூங்காவுக்கு வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலரை பிடித்தனர். 
    அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களை எச்சரித்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai