Enable Javscript for better performance
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறை அடுத்த ராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் பி.சுந்தரவடிவேலு தலைமை வகித்து, தொடக்கிவைத்தார். சுகாதார ஆய்வாளர் மு.சம்பத் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட சுகாதார நிலைய மருத்துவர் என்.ஈஸ்வரி பேசியதாவது:
    உலக மக்கள் தொகை கடந்த 1987-ஆம் ஆண்டில் 500 கோடியை தாண்டிவிட்டது என்ற அபாயத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஜூலை 11-ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. அன்று முதல் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, நோய்களின் தாக்கம், சமூக, பொருளாதார பிரச்னைகள் ஏற்பட்டு, நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, சிறு குடும்ப நெறியை கடைப்பிடிக்க வலியுறுத்தி தமிழ்நாடு குடும்ப நலத் திட்டத்தை செயல்படுத்தி, முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai