Enable Javscript for better performance
கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக திறக்கப்படாத ரேஷன் கடை- Dinamani

சுடச்சுட

    

    கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக திறக்கப்படாத ரேஷன் கடை

    By DIN  |   Published on : 19th July 2018 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூரை அடுத்த வெள்ளூர் ஊராட்சி காலனியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக திறக்கப்படாமல் உள்ள நியாய விலைக் கடையை  திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
    வெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்காக 2016 - 2017ஆம் ஆண்டு போளூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்தில் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டது.
    இந்தக் கட்டடம் கட்டப்பட்டு கடந்த ஓராண்டாக திறக்கப்படாமல் உள்ளது. 
    இதன் காரணமாக, இந்த நியாயவிலைக் கடை வளாகத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் மது அருந்துவது, சீட்டாடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
    எனவே, உடனடியாக இந்தக் கடையைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai