Enable Javscript for better performance
காரை வழிமறித்து  6 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே காரை வழிமறித்து பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    செய்யாறு லோகநாதன் தெருவில் வசிப்பவர் ரமேஷ். இவர், கார் ஓட்டுநர். இவரது மனைவி ஞானசௌந்தரி (40). இவர், அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
    இந்த நிலையில், ஞானசௌந்தரியும், அவரது தோழிகளான பாரதி, கங்கா, வாணி, மலர், சோபனா ஆகியோரும் காரில் செவ்வாய்க்கிழமை வேலூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
    செய்யாறு - ஆற்காடு சாலையில் பாப்பந்தாங்கல் கிராமம் அருகே சென்றபோது, எதிரே காரில் வந்த செய்யாறு கன்னியம் நகரைச் சேர்ந்த தெய்வசிகாமணி, பாலாஜி உள்ளிட்ட 6 பேர் ஞானசௌந்தரி உள்ளிட்டோர் சென்ற காரை வழிமறித்தனராம்.
    பின்னர், ஞானசௌந்தரியின் கால் பகுதியில் அவர்கள் கத்தியால் குத்தியதுடன், அவர் அணிதிருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம். இதனால் பலத்த காயமடைந்த ஞானசௌந்தரி, செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், மோரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்ஜெயக்குமார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தெய்வசிகாமணி, பாலாஜி 
    உள்ளிட்ட 6 பேரை தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai