Enable Javscript for better performance
திடக்கழிவு மேலாண்மை கட்டணத்தை ரத்து செய்யக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியை அடுத்த தேசூர் பேரூராட்சியில் வசூலிக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை நிர்வாக கட்டணத்தை ரத்து செய்யக் கோரி, பொதுமக்கள், வியாபாரிகள் சார்பில், பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
    மனுவில் பொதுமக்கள் கூறியுள்ளதாவது: தேசூர் பேரூராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி என பல வகைகளில் நாங்கள் வரி செலுத்து வருகிறோம். இந்த நிலையில், பொதுமக்களின் கருத்து கேட்காமலேயே தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை நிர்வாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    இதனை முழுமையாக ரத்து செய்யக் கோரி ஏற்கனவே மனு அளித்திருந்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, திடக்கழிவு மேலாண்மை நிர்வாக கட்டணத்தை ரத்து செய்ய வேண்டி தற்போது மீண்டும் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) பேரூராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai