Enable Javscript for better performance
தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியை அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி சார்பில், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் தெள்ளாறில் புதன்கிழமை  நடைபெற்றது.
    இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை கல்லூரித் தலைவர் வி.முத்து கொடியசைத்து தொடக்கிவைத்தார். தெள்ளாறு பெருமாள் கோயில் அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலம், பஜார் வீதி வழியாக கல்லூரி வளாகம் சென்றடைந்தது. ஊர்வலத்தில், கல்லூரிப் பொருளாளர் எஸ்.பழனிச்சாமி, கல்லூரி முதல்வர் இரா.ஏழுமலை மற்றும் கல்லூரி இயக்குநர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட  அலுவலர் சு.சரவணன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai