Enable Javscript for better performance
தொடர் திருட்டு சம்பவம்: ஆரணியில் பள்ளி நிர்வாகிகளுடன் போலீஸார் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    தொடர் திருட்டு சம்பவம்: ஆரணியில் பள்ளி நிர்வாகிகளுடன் போலீஸார் ஆலோசனை

    By DIN  |   Published on : 19th July 2018 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி உள் கோட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.
    ஆரணியில் சில பள்ளிகளில் லட்சக்கணக்கான பணம் திருட்டுபோனது. மேலும், இரண்டு பள்ளிகளின் பேருந்துகள் கிராம சாலைகளில் கவிழ்ந்தன. இதனால், மாணவர்கள் சிறு காயத்துடன் தப்பினர்.
    இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நீடிக்காமல் இருக்க ஆரணி பகுதியிலுள்ள அரசு, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நகர காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு தலைமை வகித்து, டிஎஸ்பி செந்தில் பேசியதாவது: பள்ளிகளில் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தால் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். விலை உயர்ந்த பொருள்களை பாதுகாப்பான அறைகளில் வைக்க வேண்டும். பணத்தை பள்ளிகளில் வைக்க வேண்டாம்.
    அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்களை முகப்பு, சுற்றுப்புறங்களில் கட்டாயம் பொருத்த வேண்டும். தகுதியான இரவு பாதுகாவலர்கள் நியமிக்க  வேண்டும். வாகனங்களில் இருக்கைக்கு அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்றார்.
    இதில், காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா, உதவி ஆய்வாளர் ஜமீஸ்பாபு, அரசு, தனியார், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai