Enable Javscript for better performance
"மை சைல்ட் மை கேர்' திட்டத்தில் வசூலிக்கப்பட்டதொகைக்கு வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    "மை சைல்ட் மை கேர்' திட்டத்தில் வசூலிக்கப்பட்டதொகைக்கு வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரிக்கை

    By DIN  |   Published on : 19th July 2018 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் "மை சைல்ட் மை கேர்' திட்டத்தில் வசூலிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய்க்கு வரவு, செலவு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று 14 ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
    திருவண்ணாமலை மாவட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் 14 கூட்டமைப்புக் கூட்டம் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது. 
    கூட்டத்தில், மை சைல்ட் மை கேர் திட்டத்துக்கு முறையற்ற முறையில் ரசீது இல்லாமல் பெறப்பட்ட பல லட்சம் ரூபாய்க்கான வரவு, செலவு அடங்கிய வெள்ளை அறிக்கையை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் உடனடியாக வெளியிட வேண்டும்.
    தமிழக அரசால் கொண்டுவரப்பட இருக்கும் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறையை வரவேற்பது. 
    தமிழக அரசின் முறையான அரசாணையோ, அறிவுறுத்தலோ இல்லாமல் தான்தோன்றித் தனமாக தனியார் நிறுவனத்துடன் கை கோத்துக்கொண்டு செயல்படுத்தப்படும், நம்பகத்தன்மையற்ற மற்றும் தனிமனித ரகசிய பாதுகாப்பை உறுதி செய்யாத "சிஇஓ போர்டல் ஆப்' செயலியை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டிப்பது. தொடர்ந்து, ஆசிரியர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வந்தால், நீதிமன்றத்தையும், மனித உரிமைகள் ஆணையத்தையும் நாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    கூட்டத்தில், 14 ஆசிரியர் சங்கங்கள் அடங்கிய திருவண்ணாமலை மாவட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு 
    நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai