Enable Javscript for better performance
வருவாய்த் துறையினர் அரசுப் பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டும்: கோட்டாட்சியர் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வருவாய்த் துறையினர் அரசுப் பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டும்: கோட்டாட்சியர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 19th July 2018 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருவாய்த் துறையினர் அரசுப் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் சீ.தங்கவேலு அறிவுறுத்தினார்.
    திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியராக சீ.தங்கவேலு அண்மையில் பொறுப்பேற்றார். இவரை விவசாய சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    இந்த நிலையில், தமிழ்நாடு குரூப் - 2 நேரடி நியமன அலுவலர் சங்கம், திருவண்ணாமலை அரசு அலுவலர் ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகிகள் புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது, வருவாய்த் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி கோட்டாட்சியர் சீ.தங்கவேலு பேசியதாவது:
    அரசுக்கான வருவாய் வசூல், அரசு நலத் திட்டங்கள் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இதற்கு வருவாய்த் துறை அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசுப் பணிகளை செவ்வனே செய்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நற்பெயர் பெற்றுத் தர வேண்டும் என்றார்.
    நிகழ்ச்சியில், தமிழ்நாடு குரூப் - 2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் து.கிருஷ்ணமூர்த்தி, 
    மாவட்டச் செயலர் ஏ.சண்முகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் இரா.செல்வபாண்டியன், மாவட்டச் செயலர் என்.மாசிலாமணி, மாவட்ட துணைத் தலைவர் ஜி.சேகர், தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai