Enable Javscript for better performance
விஷ பூச்சி கடித்து  இலங்கைப் பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கம் அருகே விஷ பூச்சி கடித்து இலங்கைப் பெண் இறந்தார். மேலும், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கலசப்பாக்கத்தை அடுத்த கொண்டம் கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாமைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (23). இவரை வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த விஷபூச்சி செவ்வாய்க்கிழமை கடித்தது.
    இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலட்சுமி உயிரிழந்தார். புதன்கிழமை அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், மயானத்தில் நல்லடக்கம் செய்யும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
    அப்போது, அங்கிருந்த விஷபூச்சிகள் 10-க்கும் மேற்பட்ட பெண்களைத் துரத்தி, துரத்திக் கடித்தது. இதில் காயமடைந்த அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஆரணி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (36), கஸ்தம்பாடி பகுதியைச் சேர்ந்த வசந்தி (30), அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி நாயகம் (59) ஆகியோர் மட்டும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai