Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் சத்துணவை ஆய்வு செய்த வட்டாட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    போளூரை அடுத்த சந்தவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை போளூர் வட்டாட்சியர் தியாகராஜன் ஆய்வு செய்தார்.
    சந்தவாசல் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் கீழ் வழங்கப்படும் மதிய  உணவை வாங்கிச் சாப்பிடுகின்றனர்.
    இந்தப் பள்ளியில் போளூர் வட்டாட்சியர் தியாகராஜன் அண்மையில் ஆய்வு செய்தார். அப்போது, அவர் உணவை சாப்பிட்டுப் பார்த்ததுடன், உணவு எவ்வளவு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது, தரமாக சமைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். உடன், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி, தலைமை 
    ஆசிரியர் காளமேகம் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai