Enable Javscript for better performance
ஆரணி வேம்புலி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    இந்த பூஜையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை  விழாக்குழுத் தலைவர் 
    ஜி.வி.கஜேந்திரன் செய்திருந்தார்.
    ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 45-ஆவது ஆண்டாக ஆடி வெள்ளி விழா நடைபெறுகிறது. வியாழக்கிழமை தொடங்கிய இந்தத் திருவிழா சனிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர். இதையொட்டி, புஷ்பல்லக்கு, நாகஸ்வர கச்சேரி, கரகாட்டம், ஒயிலாட்டம், வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai