Enable Javscript for better performance
உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.6.38 லட்சத்தில் டிராக்டர்- Dinamani

சுடச்சுட

    

    உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.6.38 லட்சத்தில் டிராக்டர்

    By DIN  |   Published on : 20th July 2018 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேட்டவலத்தை அடுத்த நாடழகானந்தல் கிராமத்தில் விவசாய உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.6.38 லட்சத்திலான டிராக்டர் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு உதவி வேளாண் அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வேளாண் துறை சார்பில் ரூ.5 லட்சம் மானியம், விவசாய உழவர் உற்பத்தியாளர் குழு செலுத்திய ரூ.1.38 லட்சம் என மொத்தம் ரூ.6.38 லட்சம் மதிப்பிலான டிராக்டரை வழங்கினார்.
    விழாவில், கீழ்பென்னாத்தூர் திமுக ஒன்றியச் செயலர் ஆராஞ்சி ஆறுமுகம், மாவட்டப் பிரதிநிதி சண்முகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஊராட்சிச் செயலர் ஏழுமலை, விவசாய உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai