Enable Javscript for better performance
ஐம்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    தண்டராம்பட்டை அடுத்த ஜி.குப்பந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஐம்பெரும் விழா நடைபெற்றது.
    திருவண்ணாமலை தாயன்பு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் பொன்.அன்பழகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.பொன்னுசாமி, கல்விக்குழு உறுப்பினர் ஆர்.செந்தில்குமார், முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜி.தர்மாங்கதன், மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் ஜெகம் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    பள்ளித் தலைமை ஆசிரியை எ.சாந்தி வரவேற்றார். செங்கம் மாவட்டக் கல்வி அலுவலர் சி.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, காமராஜர் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
    மேலும், தாயன்பு அறக்கட்டளை சார்பில் பள்ளியின் பல இடங்களில் எழுதப்பட்ட திருக்குறள் பலகைகளை சத்யம் கலைக் கல்லூரி தாளாளர் வணங்காமுடி திறந்து வைத்தார். பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மறைந்த பள்ளி ஆசிரியர்கள் என்.நாராயணசாமி, ஜி.கோவிந்தசாமி, ஜி.சித்தைய்யா ஆகியோரின் படங்கள் திறக்கப்பட்டன.
    விழாவில், திருவண்ணாமலை வாசகர் வட்டத் தலைவர் அ.வாசுதேவன், உலக தமிழ்க் கவிஞர் பேரவைச் செயலர் மு.கண்ணன், தலைமை ஆசிரியர் பலராமன், வேங்கிக்கால் வாசகர் வட்டத் தலைவர் சுப்பிரமணி, அறக்கட்டளை இயக்குநர் செந்தில் அழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai