Enable Javscript for better performance
கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் வர்த்தக அங்காடி திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் வர்த்தக அங்காடி திறப்பு

    By DIN  |   Published on : 20th July 2018 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் வர்த்தக அங்காடி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் சார்பில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக் குழு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    இவற்றின் மூலம் சிறு தொழில்களை மேற்கொள்ள மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்குத் தேவையான பயிற்சி அளித்து, சந்தையில் விற்பனை செய்யக்கூடிய பல்வேறு பொருள்களை தயாரித்து விற்று குழு உறுப்பினர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
    அந்த வகையில், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தியாகும் பொருள்களை விற்பனை செய்ய சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 10 இடங்களில் வர்த்தக அங்காடிகள் திறக்கப்படுகின்றன.
    முதல்கட்டமாக, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் விற்பனை அங்காடி திறக்கப்பட்டது. வேடநத்தம் ஊராட்சியில் இயங்கும் பராசக்தி மகளிர் சுயஉதவிக் குழு மூலம் திறக்கப்பட்டுள்ள இந்த விற்பனை அங்காடியை வட்டார வளர்ச்சி அலுவலர் டி.கே.லட்சுமி நரசிம்மன் திறந்து வைத்து, எழுது பொருள்கள், சிற்றுண்டி, தேநீர், பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களின் விற்பனையைத் தொடக்கி வைத்தார்.
    இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆர்.ரபியுல்லா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க களப்பணி வழி நடத்துநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai