Enable Javscript for better performance
சாலைப் பணியின்போது மாயமான குட்டி விமானம் மீட்பு: ஆடு மேய்க்கும் பெண் எடுத்துக் கொடுத்தார்- Dinamani

சுடச்சுட

    

    சாலைப் பணியின்போது மாயமான குட்டி விமானம் மீட்பு: ஆடு மேய்க்கும் பெண் எடுத்துக் கொடுத்தார்

    By DIN  |   Published on : 20th July 2018 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பசுமை வழிச் சாலை நிலம் மதிப்பிடும் பணியின்போது மாயமான ஆளில்லா குட்டி விமானத்தை ஆடு மேய்க்கும் பெண் எடுத்து வந்து போலீஸாரிடம் புதன்கிழமை இரவு கொடுத்தார்.
    செங்கம் அருகே சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலை அமைப்பதற்காக நிலம் அளவிடும் பணிகளும், அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் உள்ள அசையா சொத்துகளான கிணறு, மரங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை ஆளில்லா குட்டி விமானம் படம் பிடித்து மதிப்பிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
    செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் மலை, வனப் பகுதிகளில் குட்டி விமானம் மூலம் நிலங்களை மதிப்பிடும் பணியில் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குறிப்பிட்ட தொலைவைக் கடந்து பறந்த குட்டி விமானம் ரிமோட் கன்ட்ரோலுடனான தொடர்பை இழந்து மாயமானது. இதையடுத்து, அந்த தனியார் நிறுவன ஊழியர்கள், போலீஸார், வருவாய்த் துறையினர் குட்டி விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், அது கிடைக்காததால் புதன்கிழமை காலையில் சென்னையில் இருந்து மற்றொரு குட்டி விமானம் வரவழைக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
    இந்த நிலையில், தொடரப்பாடி வனப் பகுதியில் சென்னம்மாள் புதன்கிழமை மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் குட்டி விமானம் கிடந்தது தெரிய வந்தது. அதை எடுத்து வந்த அவர், அந்த ஊரைச் சேர்ந்த சிலருடன் சென்று செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தியிடம் ஒப்படைத்தார் . சென்னம்மாளுக்கு டிஎஸ்பி சுந்தரமூர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai