Enable Javscript for better performance
செங்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள், விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.
    செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள உருது தொடக்கப் பள்ளி, அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு, பல்வேறு கடைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், இந்தப் பகுதிகளில் உரிய அனுமதியில்லாமல் விளம்பரப் பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
    இதனால் உருது தொடக்கப் பள்ளி, அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பேருந்து பயணிகளுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து, அந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பேரூராட்சி அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.
    அதனடிப்படையில், துக்காப்பேட்டை உருது தொடக்கப் பள்ளி அருகில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், விளம்பரப் பதாகைகள், அண்ணா சிலையை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் செங்கம் வட்டாட்சியர் ரேணுகா, பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், டிஎஸ்பி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டன. உடன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பேரூராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai